2015-02-17 14:35:00

வாயுக்கள் வெளியேற்றக் கட்டுப்பாட்டில் நாடுகள் முன்னேற்றம்


பிப்.17,2015. வளிமண்டலத்தில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு கியோட்டாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இருபது விழுக்காட்டுக்கு அதிகமாக வாயுக்கள் வெளியேற்றத்தை நாடுகள் குறைத்துள்ளன, இது நாடுகளின் இலக்கைவிட ஐந்து விழுக்காடு அதிகம் என்று ஐ.நா. தனது மகிழ்வை வெளியிட்டுள்ளது.

1997ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கியோட்டாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக வரைவு ஒப்பந்தம், 2005ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. இதன் பத்தாம் ஆண்டை முன்னிட்டு இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட ஐ.நா. நிறுவனம், நாடுகளின் நல்ல நடவடிக்கைகள், 2015ம் ஆண்டின் புதிய ஒப்பந்தத்திற்கு உந்துதலாக இருக்கிறது என்றும் கூறியது.

பாரிசில் இவ்வாண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக ஒப்பந்தம் கொண்டுவரப்பட உள்ளது.

2008 முதல் 2012ம் ஆண்டு வரையுள்ள காலத்தில் தொழில் வளர்ச்சியடைந்த 37 நாடுகளும், ஐரோப்பிய சமுதாயமும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட்டன என்றும் ஐ.நா. கூறியது.   

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.