2015-02-17 15:21:00

ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தைக்கு கீழை வழிபாட்டு பேராயம் செய்தி


பிப்.17,2015. லிபியாவில் 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்கள் காட்டுமிராண்டித்தனமாக கொலைசெய்யப்பட்டுள்ளதற்கு, அலெக்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் திருத்தந்தை 2ம் Tawadros அவர்களுக்குத் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயம்.

கீழை வழிபாட்டுமுறை திருப்பேராய உறுப்பினர்கள் இச்செவ்வாய் காலையில் சிறப்பு அமர்வு ஒன்றை நடத்தி, வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகவும், கொலையுண்ட அக்கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்காகவும் செபித்தனர். மத்திய கிழக்கிலும், உக்ரேய்னிலும் அணைதி நிலவவும் அவர்கள் செபித்தனர். இக்கூட்டத்தில்

காப்டிக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை Ibrahim Sidrak அவர்களும் கலந்துகொண்டார்.

21 காப்டிக் கிறிஸ்தவர்கள் காட்டுமிராண்டித்தனமாக கொலைசெய்யப்பட்டுள்ளதற்கு எகிப்து அரசு ஏழு நாள் துக்கம் கடைப்பிடிக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.