2015-02-16 16:39:00

மீட்டதை இழக்கும் அச்சமும், இழந்தை மீட்கும் ஆவலும் உள்ளன‌


பிப்.16,2015. மீட்கப்பட்டவர்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும், இழந்த ஆடுகளை மீட்கவேண்டும் என்ற ஆவலும், இன்றைய திருஅவையில் ஒன்றுக்கொன்று முரணாக உள்ள இரண்டுவிதமான சிந்தனைகள் என இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கர்தினால்களுடன் இஞ்ஞாயிறன்று உரோம் புனித பேதுரு பசிலிக்கப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்தை இழந்து, அல்லது, விசுவாச வழிபாட்டு முறைகளில் இருந்து ஒதுங்கி வாழும் மக்களில்கூட இறைவன் வாழ்கின்றார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு சேவையாற்றவேண்டும் என விண்ணப்பித்தார்.

இறைவனின் கருணை, துன்புற்றிருக்கும் ஒவ்வொரு மனிதனையும் தன்னருகே அழைக்கிறது என்பதை காணும் நாம், வாழ்வில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களை நோக்கி நம் பார்வையைத் திருப்பாமல் இயேசுவை நோக்கித் திருப்ப முடியாது எனவும் கூறினார் திருத்தந்தை.

ஒரு தொழுநோயாளரைத் தொடுவதுபற்றி அக்காலத்தில் இருந்த முற்சார்பு எண்ணங்களை மீறுவதால் வரும் விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தொழுநோயாளியின் துன்பத்தில் பங்கெடுக்கும்விதமாக அவரைத் தொட்டு இயேசு குணமாக்கியதை இன்றைய திருஅவைத் தலைவர்களுக்கு பாடமாக முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துத் தடைகளையும் தாண்டிச் சென்று, இறைக்குடுமபத்திற்குள் அனைத்து அங்கத்தினர்களையும் கொணரவேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.