2015-02-16 16:06:00

Tonga அரசர்- முதல் கர்தினாலுக்கு திருத்தந்தையிடம் நன்றி


பிப்.16,2015. Tonga நாட்டு மன்னர் 6ம் Tupou, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார்.

நியூசிலாந்துக்கும் ஹவாய்க்கும் இடையே உள்ள போலினேசியா பகுதியின் தீவு நாடாகிய Tongaவின் மன்னர் 6ம் Tupou, திருத்தந்தையை சந்தித்து உரையாடிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும், நடுகளுக்கிடையேயான உறவுகளுக்கான திருப்பீட அலுவலகச் செயலர் பேராயர் Paul Gallagher ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

முதன்முறையாக Tonga நாட்டு குடிமகன் ஒருவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு தன் நன்றியைத் தெரிவிக்க வந்துள்ளதாக திருத்தந்தையிடம் உரைத்த மன்னர் 6ம் Tupou, Tonga குடிமக்கள் இதற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பீட அதிகாரிகளுடன் மன்னர் நடத்திய பேச்சுவார்த்தைகளில், Tongaவின் அரசியல் நிலைகள், தலத்திருஅவையின் பங்களிப்பு, பசிபிக் நாடுகள் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் போன்றவை விவாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.