2015-02-14 16:01:00

சீன ஆயர் Enxiang குறித்த உண்மைகளை வெளியிடுமாறு போராட்டம்


பிப்.14,2015. சீனாவில் காணாமல் போயிருக்கும் ஹெபெய் மாநிலத்தின் Yixian ஆயர் Cosmas Shi Enxiang மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ள மற்றோர் அருள்பணியாளர் குறித்த விபரங்களை வெளியிடுமாறு ஹாங்காங் சீன அலுவலகத்தின் முன்னர் இச்சனிக்கிழமையன்று போராடினார் ஹாங்காங் முன்னாள் ஆயர் கர்தினால் Joseph Zen

ஆயர் Cosmas Shi Enxiang அவர்கள் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது குறித்து சீன அரசு மௌனம் காத்து வருவதால், அந்த ஆயர் குறித்த விபரங்களைக் கேட்டு கர்தினால் சென் அவர்கள், பல கத்தோலிக்கருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் காவல்துறையின் தடுப்புக்காவலின்போது காணாமல்போன  அருள்பணி Su Zhimin அவர்கள் விடுதலை செய்யப்படுமாறும் வலியுறுத்திப் போராடிய இவர்கள், கடந்த பல ஆண்டுகளில் தடுப்புக்காவலின்போது இறந்த சீன ஆயர்களையும் நினைவுகூர்ந்தனர். 

எவ்வித விசாரணையுமின்றி 14 ஆண்டுகளுக்கு முன்னர் இரகசியமாக கைதுசெய்யப்பட்ட ஆயர் Cosmas Shi அவர்கள் தடுப்புக்காவலில் இறந்திருக்கலாம் நம்பப்படுகிறது. இப்போராட்டத்தை ஹாங்காங் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை ஏற்பாடு செய்தது.

ஆதாரம்: AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.