2015-02-13 16:30:00

சிறாரைப் போரில் ஈடுபடுத்துவது நிறுத்தப்பட வேண்டும்,யூனிசெப்


பிப்.13,2015. ஆப்கானிஸ்தான் முதல் காங்கோ குடியரசு வரை, உலகில் போர் இடம்பெறும் பல்வேறு பகுதிகளில் ஆயுதக் குழுக்கள் சிறாரைப் படைப்பிரிவுக்குச் சேர்ப்பது தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கவலை தெரிவித்துள்ளது யூனிசெப் நிறுவனம்.

இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, சிறார் படைவீரர்க்கு எதிரான அனைத்துலக நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட யூனிசெப் நிறுவனம், சிறாருக்கு எதிரான இந்தக் கொடுமையான உரிமை மீறல் நிறுத்தப்பட உடனடி நடவடிக்கை அவசியம் எனக் கூறியுள்ளது.

இராணுவத்திலிருந்து சிறார்ப் படைவீரர்களை நீக்கும் அரசுகளின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும், சிறார் படைப்பிரிவில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று, சிறார் படைவீரர் குறித்த ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதி Leila Zerrougui கூறினார்.

கடந்த ஆண்டில் மட்டும் தென் சூடானில் 12 ஆயிரம் சிறார் படைப்பிரிவில் இன்னும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையை, சிறார் படைவீரர் குறித்த ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதியும், யூனிசெப் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன.

ஆதாரம்:UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.