2015-02-09 15:04:00

கடுகு சிறுத்தாலும்–தவறைத் திருத்தி வாழ்பவர்க்குப் புதுவாழ்வு


Ulysses S. Grant அவர்கள், 1853ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவில் இருந்த நான்காவது இராணுவப் பிரிவுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். சிறந்த வீரரான இவர் ஒருநாள் தனது அலுவலகத்தில் பணியின்போது குடிபோதையில் இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அப்பதவியிலிருந்து விலகுமாறு பணிக்கப்பட்டார். எவ்வித மறுப்புமின்றி 1854ம் ஆண்டில் அப்பதவியிலிருந்து விலகினார் இவர். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இராணுவத்தில் சேரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. Donelson என்ற இடத்தில் நடந்த போரில் இவரது பங்கும் மிகவும் பாராட்டப்பட்டது. எனவே Grant அவர்கள் மீண்டும் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்பதவியைத் திறமையாகச் செய்த இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக உயரும்வண்ணம் தன்னைச் செதுக்கினார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் 18வது அரசுத்தலைவராக, 1869ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் 1877ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி வரை பணியாற்றியவர் Ulysses Grant.

தவறுவது இயல்பு. வரலாற்றில் உயர்ந்த மனிதர்கள் பலர், தங்கள் வாழ்வில் செய்த தவறுகளைத் திருத்தி நல்வழி வாழ்ந்ததால் புதிய பிறப்பினை எடுத்துள்ளார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.