2015-02-05 16:02:00

பாலியல் முறைகேடுகள் திருஅவையிலிருந்து வேரறுக்கப்படவேண்டும்


பிப்.05,2015 குழந்தைகளையும், சிறுவர் சிறுமியரையும் பாதுக்காக்க கத்தோலிக்கத் திருஅவை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்ற நம்பிக்கையை குடும்பங்களில் உருவாக்குவது ஆயர்கள், துறவுசபை தலைவர்கள், பணி நிறுவனப் பொறுப்பாளர்கள் அனைவரின் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சிறுவர், சிறுமியர் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையுடன் உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க மறைமாவட்டங்கள், துறவு சபைகள், மற்றும் அனைத்து பணி நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு மடல் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

சிறுவர், சிறுமியர் பாதுகாப்பிற்கென கடந்த சில ஆண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளை இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, பாலியல் தொடர்பான முறைகேடுகள் திருஅவையிலிருந்து முற்றிலும் வேரறுக்கப் படவேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

பாலியல் தொடர்பான முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும், அவர்களுக்குத் தேவையான ஆதரவுகளை வழங்கவும் திருஅவைத் தலைவர்கள், துறவுசபைத் தலைவர்கள், பங்கு அருள் பணியாளர்கள் அனைவரும் அக்கறையுடனும், கனிவுடனும் செயல்படவேண்டும் என்று திருத்தந்தை இம்மடலில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.