2015-02-04 16:16:00

கேலிச் சித்திரங்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் தொடர்பு இல்லை


பிப்.04,2015 இஸ்லாமிய அடிப்படைவாத அரசு ISIS செய்வது எதுவும் உண்மையான இஸ்லாம் மதத்துடன் தொடர்பு கொண்டது அல்ல; இறைவாக்கினர் முகம்மது குறித்த கேலிச் சித்திரங்கள் கிறிஸ்தவ மதத்துடன் எவ்வகையிலும் தொடர்பு கொண்டனவல்ல; சயனிசக் (Zionist) கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுவோர் யூத மதத்துடன் தொடர்பு கொண்டவர்கள் அல்ல என்று  ஜோர்டன் அரசின் அமைச்சர் ஒருவர் கூறினார்.

இத்தங்களன்று Amman நகரில் துவங்கிய "அன்பும் மன்னிப்பும் கருத்தரங்கி"ல் உரையாற்றிய ஜோர்டான் அரசின் மத உறவுகளின் அமைச்சர் Hayel Dawoud அவர்கள், ஆபிரகாமைத் தங்கள் தந்தையென ஏற்று, ஒரே கடவுளை வழிபடும் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய மதங்களின் உண்மையை ஒப்புமைப்படுத்திப் பேசினார்.

இம்மூன்று மதங்களும் அறிக்கையிடும் சகிப்புத் தன்மை, மன்னிப்பு ஆகிய உயர்ந்த பண்புகளை உலகின் அனைத்து மதங்களுமே அறிக்கையிடுகின்றன என்றும் அமைச்சர் Dawoud அவர்கள் எடுத்துரைத்தார்.

இத்திங்கள் செவ்வாய் ஆகிய இருநாட்கள் Amman நகரில் நடைபெற்ற இருநாள் கருத்தரங்கில், ஜோர்டான், பாலஸ்தீனம், எகிப்து, சூடான், லெபனான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.