2015-02-02 16:07:00

வெனிசுவேலாவில் 4 கோவில்கள் மீது தாக்குதல்


பிப்.02,2015. வெனிசுவேலா நாட்டின் மெரிடா பகுதியில் 4 கத்தோலிக்க கோவில்கள் குண்டுவீச்சு மூலம் தாக்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் பயணம் மேற்கொண்டுவரும் திருப்பீடத் தூதருக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

மெரிடாவின் El Llano என்ற பகுதியின் பங்குதள அருள்பணி லூயிஸ் சாஞ்சேஸ் அவர்கள், இது குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்கக் கோவில்களுக்கு எதிரான இத்தாக்குதல்கள், அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர், பேராயர் ஆல்தோ ஜொர்தீனோ, அப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும்போது இடம்பெற்றுள்ளதால், இத்தாக்குதல்களின் நோக்கம் குறித்த சந்தேகங்கள் முளைத்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகையத் தாக்குதல்கள் மக்களிடையே அச்சத்தையும், திகில் உணர்வுகளையும் விதைத்துள்ளதாக ஃபிதெஸ் செய்தி நிறுவனம் கவலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.