2015-01-30 16:14:00

மியான்மார்-முரண்பாட்டு மசோதாக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்


சன.30,2015. திருமணம், மதம், பலதாரத்திருமணம், குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை குறித்து மியான்மார் புத்தமத நிறுவனம் ஒன்று பரிந்துரை செய்துள்ள மசோதாக்களை  நாடாளுமன்றம் புறக்கணிக்குமாறு விண்ணப்பித்துள்ளது அந்நாட்டில் 180 பொதுமக்கள் சமுதாய அமைப்புகளைக் கொண்ட ஒரு குழு.

இந்த மசோதாக்கள், தேசிய மற்றும் அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாக இருக்கும் என்றும், இவை சட்டமாக்கப்பட்டால் சமய பதட்டநிலைகளைத் தூண்டிவிட்டு சமுதாயத்தின் உறுதியான தன்மை அழிக்கப்படும் என்றும் அக்குழு எச்சரித்துள்ளது.

இனம் மற்றும் மதத்தைப் பாதுக்காப்பதற்குரிய புத்தமதக் கழகம் பரிந்துரைத்துள்ள இம்மசோதாக்கள், சமயக் குழுக்கள் மத்தியில் வெறுப்பையும் பாகுபாட்டையும் சண்டையையும் பதட்டநிலைகளையும் கிளறிவிடும் என மேலும் அக்குழு எச்சரித்துள்ளது.

இன்னும், மியான்மாரின் மேற்கேயுள்ள Chin மாநிலத்தில் Hakhaலுள்ள கிறிஸ்தவ சமூகம் அமைத்துள்ள 16 மீட்டர் உயரமுடைய சிலுவை அகற்றப்படாவிட்டால், அதனை அழிப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளவேளை, இதனைப் பாதுகாப்பதற்காகச் சிறைக்குச் செல்வதற்கும் தயார் என்று அப்பகுதி கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : UCAN/AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.