2015-01-30 16:04:00

சமயச் சார்பற்ற மக்களாட்சி இயல்பு தொடர்ந்து காக்கப்பட அழைப்பு


சன.30,2015. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களின் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவும், இந்தியாவின் சமயச் சார்பற்ற மக்களாட்சி இயல்பைத் தொடர்ந்து கட்டிக் காக்கவும் வேண்டுமென கேட்டுள்ளனர் ஆயர்கள்.

சிறுபான்மையினர் நாடெங்கும் பரவலாகத் தாக்கப்படுவதும், வீடு திரும்புதல்(ghar wapsi) என்ற நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளவேளை, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் இந்தியாவின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும்  அனுப்பியுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில் இவ்வாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கத்தோலிக்கராகிய நாம் எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் போராடவில்லை, ஆனால் நம் உயரிய நாட்டின் அரசியல் அமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள சமய மற்றும் மனச்சான்றின் சுதந்திரங்கள், அடிப்படை மனித உரிமைகள், மக்களாட்சி போன்ற புனித கருத்தியல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று போராடுகிறோம் என்று கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

நாட்டின் சமயச் சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தலை முன்வைக்கும் விவகாரங்களில் உடனடியாகத் தலையிட்டு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும், மத்திய அமைச்சரவையிலும் கட்சியிலும் பொறுப்பில் உள்ளவர்களின் அச்சுறுத்தும் அறிக்கைகளை நிறுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

ஆதாரம் : The Hindu/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.