2015-01-30 16:18:00

எபோலா நோயின் தீவிரம் குறைந்து வருகிறது,WHO


சன.30,2015. மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா உயிர்க் கொல்லி நோயின் தீவிரம் குறைந்து வருவதாகவும், கடந்த ஏழு மாதங்களில் முதன்முறையாக எபோலாவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக உள்ளதாகவும் உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், சியெரா லியோன், கினி, லைபீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோய்ப் பாதிப்பின் தீவிரம் சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, எபோலா நோய்ப் பாதிப்புக்களை உடனடியாகக் கண்டறிதல், அந்த நோயாளிகளைப் பராமரித்தல், அதில் இறந்தவர்களைப் பாதுகாப்பாக அடக்கம் செய்தல் போன்ற உள்கட்டமைப்புகளை விரைவில் முன்னேற்றுமாறும் உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

எபோலா பாதிக்கும் அளவு குறைந்துவிட்டாலும், நோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.