2015-01-29 15:49:00

க்ஷங்காய் அரசு குழந்தைகளைக் கொண்டிருக்க வலியுறுத்தல்


சன.29,2015. 2015ம் ஆண்டு முடிவதற்குள் சீனாவின் க்ஷங்காய் நகரின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவராய் இருப்பார்கள் என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு க்ஷங்காய் அரசு குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

க்ஷங்காயில் 35 ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரு குழந்தை திட்டத்தைக் கைவிட்டு தற்போது குடும்பங்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை விரைவில் பெற்றெடுக்க வேண்டும் என்றும், இல்லாவிடில் க்ஷங்காய் நகரின் நிலைமை மோசமடையும் என்று கூறியுள்ளது அந்நகரின் குடும்ப வளர்ச்சி மையம்.

இவ்வாண்டு முடியும்போது க்ஷங்காய் நகரின் மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடையவராய் இருப்பார்கள். பிறப்பு விகிதத்தில் மாற்றம் இல்லையெனில் ஓய்வூதியமும் சமூகநலத் திட்டங்களும் பாதிக்கப்படும் என்று நகர குடும்பக்கட்டுப்பாட்டு அலுவலகம் கூறியது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.