2015-01-29 15:31:00

கொரிய சமயத் தலைவர்கள் வட கொரியாவில் அமைதிக்காகச் செபம்


சன.29,2015. வட கொரியத் தலைநகர் Pyongyang நகரில், கொரிய சமயங்கள் அவையின்(KCRP) உறுப்பினர்கள் ஒன்றுகூடி கொரியாவில் அமைதிக்காகச் செபிப்பதற்கு அனுமதியளித்துள்ளனர் வட கொரிய கம்யூனிச அதிகாரிகள்.

ஜப்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து கொரிய தீபகற்பம் விடுதலை அடைந்ததன் எழுபதாம் ஆண்டு நிறைவை, 2015ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் கொரிய மக்கள்  சிறப்பிக்கும்போது, அமைதிக்கான கொரிய சமயங்கள் அவை, Pyongyang நகரில் கூடி கொரியாவில் அமைதிக்காகச் செபிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்காகச் செபிக்கும் இந்நிகழ்வை இவ்வாண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட நாள்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, இந்த அவையின் பொதுச் செயலர் ஆங்லிக்கன் சபை அருள்பணி Kim Kwang-jun கூறினார்.

KCRP என்ற இந்த அவையில் தென் கொரியாவின் ஏழு பெரிய மதங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.