2015-01-28 16:05:00

மலேசியா-அல்லா என்ற சொல்லை திருப்பலியில் பயன்படுத்தலாம்


சன.28,2015. மலேசியாவில் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல் பயன்படுத்தப்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு ஹெரால்டு கத்தோலிக்க வார இதழுக்கு மட்டுமேயன்றி, விவிலியத்துக்கும், திருப்பலிகளுக்கும், பிற சமய வழிபாடுகளுக்கும் அல்ல என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் மலேசிய உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறித்து கோலாலம்பூர் உயர்மறைமாவட்டத்தின் இணையதளத்தில் மேய்ப்புப்பணி அறிக்கையை பிரசுரித்துள்ள  கோலாலம்பூர் போராயர் Julian Leow அவர்கள், உச்ச நீதிமன்றத்தின் தடையுத்தரவு ஹெரால்டு கத்தோலிக்க வார இதழுக்கு மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

விவிலியம், திருப்பலிகள் மற்றும் சமய வழிபாடுகளில், கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல்லை, சட்டத்தை மீறாமல் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார் போராயர் Julian Leow

அறுபது விழுக்காட்டு முஸ்லிம்களைக் கொண்டுள்ள மலேசியாவில், புத்தமதத்தினருக்கு அடுத்த எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் உள்ளனர். கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல், உள்ளூர் மொழி விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இலத்தீன்-மலாய் அகராதியில் காண முடிகின்றது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.