2015-01-28 16:24:00

15 ரூபாய் செலவில் உப்பு நீரை குடிநீராக மாற்றலாம்


சன.28,2015. குறைந்த செலவில் உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை, தமிழகத்தின் காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கும் சூரிய ஒளி ஆற்றலைக் கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை, இக்கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ்-கம்யூனிகேஷன் பிரிவில் பயிலும் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து ஆகிய மூன்று மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்புக்கு 'டிசாலினேஷன் ஆப் சால்ட் வாட்டர் டூ டிரிங்கிங் வாட்டர்' அதாவது உப்பு நீரை நன்னீராக மாற்றும் செயல்முறை என இவர்கள் பெயரிட்டுள்ளனர்.

கடல் நீர் எவ்வாறு ஆவியாகி மேலே சென்று, மழை என்ற பெயரில் நன்னீராக உருவாகிறதோ அதை அடிப்படையாக கொண்டு இதை உருவாக்கியதாகவும், இதற்கு 15 ரூபாய் மட்டுமே செலவழித்து உருவாக்கியதாகவும், இதற்குரிய சாதாரண பொருள் இல்லாதவர்கள் அதிகபட்சம் 100 ரூபாய் செலவழித்து இதை உருவாக்கலாம் எனவும், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் நன்னீராகப் பெற முடியும் எனவும் இவர்கள் கூறியுள்ளனர்.

மதுரையில் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த நீர் மேலாண்மை குறித்த போட்டியில் 'இஸ்ரோ' அறிவியலாளர்களால் பாராட்டப்பட்டு மாநில அளவில் முதலிடத்தையும், அதற்காக 10 ஆயிரம் ரூபாய் பரிசையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

குறைந்த செலவில் உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை, தமிழகத்தின் காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கும் சூரிய ஒளி ஆற்றலைக் கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை, இக்கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ்-கம்யூனிகேஷன் பிரிவில் பயிலும் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து ஆகிய மூன்று மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.