2015-01-27 16:31:00

ஆசிய-பசிபிக் பகுதியில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம்,UNDP


சன.27,2015. ஏழ்மை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மக்களாட்சியை நிலைநாட்டும் அரசு நிர்வாகம், நெருக்கடிகளை எதிர்கொள்ளல் போன்ற செயல்பாடுகளில், ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் இருக்கின்ற 36 நாடுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

UNDP என்ற ஐ.நா. வளர்ச்சித்திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பகுதியிலிருந்து 200 கோடி டாலர் பெறுமான  பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

மின்னணுக் கழிவுப்பொருள்கள் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்கு Baidu என்ற சீனாவின் பெரிய வலைத்தள நிறுவனம் அதிக முயற்சிகள் எடுத்துள்ளதையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இப்பகுதியில் மக்களாட்சி முறையை ஊக்குவிப்பதற்குரிய தேர்தல் நடவடிக்கைகளில் 1 கோடியே 67 இலட்சம் வாக்காளர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் UNDP அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.