2015-01-26 15:46:00

கடுகு சிறுத்தாலும் – புதுமாப்பிள்ளை தந்த பரிசு


குடிமகன்கள் நிறைந்த அந்த ஊரில் ஒரு குடிசைத் தொழிலாளிக்குத் திருமணம். அந்த ஊர் வழக்கப்படி புதுமாப்பிள்ளை தனது புது மனைவிக்கு ஏதாவது ஒரு பரிசுப் பொருள் கொடுக்க வேண்டும். பரிசளிக்கும் சடங்கு நேரம் வந்தபோது ஒரு பாட்டிலினுள் சிறு தாள் ஒன்றை மடித்துப்போட்டு அதனை தனது மனைவிக்குக் கொடுத்தார் புதுமாப்பிள்ளை. ஆர்வத்துடன் அந்தத் தாளை எடுத்து வாசித்துப் பார்த்த புதுமனைவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதைவிட சிறந்த பரிசு எனக்கு வேறு எதுவும் தேவையில்லை என்றும் அப்பெண் சொன்னார். திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அப்படி என்ன சிறந்த பரிசு அது? என்று கேட்டு, அதனை உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். “என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தீமையான குடிப்பழக்கத்தை இன்று முதல் விட்டுவிடுகிறேன்” என்று அந்தத் தாளில் தனது கணவர் எழுதியிருந்ததை அப்படியே வாசித்தார் அந்த புது மனைவி.

தீய பழக்கத்தைக் கைவிடுகின்ற பரிசைவிட சிறந்த பரிசு இருக்க முடியுமா?

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.