2015-01-24 16:03:00

பிரேசிலில் கடந்த எண்பது ஆண்டுகளில் தற்போது கடும் வறட்சி


சன.24,2015. பிரேசில் நாடு கடந்த எண்பது ஆண்டுகளில் தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் மக்கள் தொகை அதிகமாக உள்ள மூன்று முக்கிய மாநிலங்கள், 1930ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது மிக கடுமையான வறட்சியை அனுபவிக்கின்றன என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் Izabella Teixeira அறிவித்தார்.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் அவசரக் கூட்டத்தை நடத்திய பின்னர், அந்நாடு எதிர்கொள்ளும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றிப் பேசிய அவர், பிரேசிலின் Sao Paulo, Rio de Janeiro, Minas Gerais ஆகிய மூன்று மாநிலங்கள் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த 84 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அமைச்சர் Teixeira அறிவித்தார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.