2015-01-24 15:59:00

நேபாளத்தில் சமயச் சார்பற்ற அரசியல்அமைப்புக்கு வலியுறுத்தல்


சன.24,2015. நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியல் அமைப்புக்குரிய முன்வரைவுப் பரிந்துரை தொகுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் இசைவுதெரிவிக்காமல் அத்தொகுப்பு நிலுவையில் உள்ளது குறித்து அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கு நேபாள அரசும், எதிர்க்கட்சியும் ஒருவர் ஒருவரைக் குற்றம் சுமத்தும்வேளை, இந்தப் புதிய அரசியல் அமைப்பு சமயச் சார்பற்றதாய் இருக்குமாறு வலியுறுத்தியுள்ள ஆயர்கள், இந்த அரசியல் அமைப்பு விரைவில் கொண்டுவரப்படுவதற்குச் செபிக்குமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுள்ளனர்.

நேபாள அரசுக்கும், எதிர்க்கட்சிக்குமிடையே சில முக்கியமான விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து இத்தொகுப்புக்கு இசைவு தெரிவிக்கப்படவில்லை என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

240க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்து அரச குடும்பத்தால் ஆளப்பட்டுவந்த இந்து நாடாகிய நேபாளம், 2006ம் ஆண்டில் சமயச் சார்பற்ற நாடாக மாறியது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.