2015-01-23 16:11:00

திருத்தந்தை - ஆன்மாக்களின் மீட்பு, மிக உயரிய சட்டம்


சன.23,2015. திருஅவையின் மிக உயரிய சட்டம் ஆன்மாக்களின் மீட்பு மற்றும் திருஅவையின் அவசியமான சட்ட அமைப்புகள் விசுவாசிகளுக்கு ஆற்றும் சேவையில் உள்ளன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் உச்சநீதிமன்றமாகிய ரோமன் ரோட்டா நிறுவனம் தனது நீதி ஆண்டைத் தொடங்குவதை முன்னிட்டு, ரோமன் ரோட்டாவின் 200 பிரிதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

உலகினர் அனைவரும் தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கல் வாழ்வதற்கு உதவி செய்யும் திருஅவையின் பரந்துபட்ட மறைப்பணியும் திருஅவையின் அவசியமான சட்ட அமைப்புகளாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

எனவே திருஅவையின் நீதிப்பணியை மிகுந்த ஆர்வத்தோடும், கவனத்தோடும் செய்யுமாறும், இப்பணியில் இவர்கள் ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை .

தங்களின் பொருளாதார நிலைகளால் தங்களுக்கென வழக்கறிஞர்களைக் கொண்டிர இயலாமல் இருக்கும் ஏழைகளின் வழக்குகள் இன்னும் ரோமன் ரோட்டாவில் நிலுவையில் உள்ளன, திருமணம் சார்ந்த அனைத்து நடைமுறைகளும் கட்டணம் இன்றி இடம்பெற தான் விரும்புவதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.