2015-01-20 16:24:00

தொற்றாத நோய்களால் ஓராண்டில் 1 கோடியே 60 இலட்சம் பேர் இறப்பு


சன.20,2015. நுரையீரல், இதய நோய்கள், ஸ்ட்ரோக், புற்றுநோய்கள், சர்க்கரை நோய் போன்ற தொற்றாத நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் பேர் எழுபது வயதை எட்டும் முன்னரே இறக்கின்றனர் என்று ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.

தொற்றாத நோய்கள் பற்றிய 2014ம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் Margaret Chan அவர்கள், 2015ம் ஆண்டில் ஒவ்வொரு நாடும் தனது தேசியத் திட்டத்தில், இந்நோய்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதற்கான கொள்கைகளை அமல்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

ஆண்டுக்கு ஓர் ஆளுக்கு ஒரு டாலர் முதல் மூன்று டாலர்வரை முதலீடு செய்வதன்மூலம், இந்நோய்களால் ஆண்டுதோறும் இறப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் Chan கூறினார்.

பிரேசில் நாட்டில் ஆரம்ப நலவாழ்வுத் திட்டத்தை விரிவுபடுத்தியதன்மூலம், தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளை ஓராண்டில் 1.8 விழுக்காடு குறைக்க முடிந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார் Margaret Chan.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.