2015-01-20 16:29:00

தடுப்பு மருந்துகளின் விலை உயர்வால் வாழ்வு அச்சுறுத்தல்


சன.20,2015. மனித உயிர்களைப் பாதுகாக்கும் தடுப்பு மருந்துகளின் விலை உலகில் அதிகரித்துள்ளதால் சில நாடுகளில் சிறார்க்கு தடுப்பு மருந்துகளை முழுமையாக வழங்க முடியாநிலை ஏற்பட்டுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

சிறார்க்கான பல பொதுவான தடுப்பு மருந்துகளின் விலை 2001ம் ஆண்டில் இருந்ததைவிட தற்போது 68 மடங்கு அதிகம் என்று எம்.எஸ்.எஃப் என்னும் எல்லைகளற்ற பன்னாட்டு மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது.

சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையைக் குறைக்குமாறும், அவை தயாரித்து விற்கப்படும் முறையில் மறுசீரமைப்புகளைச் செய்யுமாறும் எம்.எஸ்.எஃப் என்னும் எல்லைகளற்ற மருத்துவர்களின் அமைப்பு கேட்டுள்ளது.

இம்மருந்துகளை மேற்கத்திய பணக்கார நாடுகள், ஏழை நாடுகளைவிட விலை குறைவாகவே பெறுகின்றன என்று கூறுகிறது அவ்வமைப்பு.

தடுப்பு மருந்துகளின் விலைகளில் வெளிப்படையானதன்மை கிடையாது என்று கூறியுள்ள அந்த அமைப்பு, பல வளரும் நாடுகள் நிமோனியா தடுப்பு மருந்துக்கு பிரான்சைவிட அதிகமான விலையைக் கொடுக்க நேர்வதாக குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.