2015-01-20 16:15:00

5 வளர்இளம் பருவத்தினருக்கு ஒருவர் பள்ளிக்குச் செல்லவில்லை


சன.20,2015. உலகளவில் ஐந்து வளர்இளம் பருவத்தினருக்கு ஒருவர் வீதம், அதாவது 12க்கும் 15 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 6 கோடியே 30 இலட்சம் வளர்இளம் பருவத்தினர் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியது.

2015ம் ஆண்டுக்குப் பின்னான உலகளாவிய வளர்ச்சித்திட்ட இலக்குகளில் நடுத்தரக் கல்வியையும் இணைக்க வேண்டும் என்ற அழுத்தம் பரவலாக எழுந்துள்ளதையடுத்து ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இலண்டனில் நடைபெறும் உலக கல்வி மாநாட்டில் உறையாற்றி இவ்வறிக்கையை சமர்ப்பித்த யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினோ பொக்கோவா அவர்கள், ஏழ்மை, சமுதாயத்தில் புறக்கணிப்பு அகியவற்றை இதற்குக் காரணங்களாகக் குறிப்பிட்டார்.

பத்துச் சிறாருக்கு ஒரு சிறார் வீதம் ஆரம்பக் கல்வி வசதியைப் பெறவில்லை, இச்சிறார் வயதான பின்னர் பள்ளிக்கூட வாசனையே தெரியாத நிலைக்கு உள்ளாவர் என்ற கவலையையும் தெரிவித்தார் பொக்கோவா.

தற்போதைய நிலை தொடர்ந்தால், 1 கோடியே 50 இலட்சம் சிறுமிகளும், ஒரு கோடிச் சிறுவர்களும் வகுப்பறையையே பார்த்திராத நிலை உருவாகும் எனவும் எச்சரித்தார் பொக்கோவா.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.