2015-01-16 15:30:00

கடுகு சிறுத்தாலும். நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்


பால் பிரன்டன் என்ற புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஒரு சமயம் ரமண மகரிஷியிடம் பல வகையான கேள்விகளைக் கேட்டு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் ரமண மகரிஷியிடம், சுவாமி, இப்பொழுது உலகின் நிலைமையைக் காண்கிறபோது மிகவும் வேதனையாக இருக்கிறது, உலகின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையும் ஏற்படுகிறது, தாங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு மகரிஷி அவர்கள், எதிர்காலத்தைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள், நிகழ்காலத்தையே நீங்கள் சரியாக அறியவில்லையே.      நிகழ்காலத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டு வாழ்ந்தால் வருங்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் என்று தெளிவுபடுத்தினார். இதை பால் பிரன்டன் அவர்கள், “இந்தியாவில் ஆன்மீகத் தேடல்” என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.

நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் எதிர்காலம் புதிராக இருக்காது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.