2015-01-15 15:01:00

கடுகு சிறுத்தாலும்... குறிக்கோளுடன் அமையும் வாழ்வு


ஹார்வெர்ட் ரூஜ் என்ற அறிஞர் முன்னூறு மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழி வல்லுனர். இவர் எல்லா மொழிகளிலும் சரளமாகப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றிருந்தவர். இவரிடம் ஒருநாள் சிலர் சென்று, ஐயா, எப்படி முன்னூறு மொழிகளிலும் இப்படி தங்கு தடையின்றி பேசவும் எழுதவும் இயலுகின்றது, இத்தகைய ஆற்றலை எப்படிப் பெற்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், அது ஒன்றும் என்னுடைய தனிப்பட்ட ஆற்றல் இல்லை, இத்தகைய ஆற்றல் பெற மூன்று விடயங்கள் முக்கியமானவை என்று கூறினார். உடனே அவர்கள் அவரிடம், ஐயா, அந்த மூன்று விடயங்களை எங்களுக்கும் சொல்லித் தாருங்கள் என்று கேட்டனர். அதற்கு அறிஞர் ஹார்வெர்ட் ரூஜ் அவர்கள், முதலாவதாக, ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தணியாத ஆவல், ஆர்வம் இருக்க வேண்டும். இரண்டாவதாக, எந்த நிலையிலும் கைவிடாத விடாமுயற்சி வேண்டும், மூன்றாவதாக, கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த  மூன்று விடயங்களிலும் கவனம் இருந்தால் நீங்களும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார்.

ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு குறிக்கோளை ஏற்றுக்கொண்டால்தான் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.