2015-01-10 15:51:00

கடுகு சிறுத்தாலும்... நமது தேவைகளுக்கேற்ற கடவுள்கள்


பாதாளத்தில் தவறி விழுந்துவிடும் ஒருவர், தற்செயலாக ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு, "கடவுளே என்னைக் காப்பாற்றுங்கள்" என்று அலறியபடி, கடவுளைப் பார்த்து வேண்டுகிறார். கடவுள் அவரிடம் “நீ உண்மையிலேயே என்னை நம்புகிறாயா?” என்று கேட்கிறார். “ஆம்” என்று அம்மனிதன் மரண பயத்தில் அலறுகிறார். கடவுள் அவரிடம், “நீ என்னை முழுவதும் நம்புவதாக இருந்தால், நீ பற்றியிருக்கும் அந்த மரத்தின் கிளையை விட்டுவிடு” என்று சொல்கிறார். நமக்குத் தெரிந்த கதை இது.

இந்தக் கதையின் தொடர்ச்சியாக, ஒருவர் கூறிய ஒரு கற்பனை இது... பற்றியிருக்கும் கிளையை விட்டுவிடு என்று கடவுள் சொன்னதும், கொஞ்ச நேரம் அம்மனிதன் சிந்திக்கிறார். பின்னர், இன்னும் உரத்தக் குரலில், "வேறு கடவுள் யாராவது இருக்கிறீர்களா, என்னைக் காப்பாற்ற?" என்று அலறுகிறார்.

 

உண்மைக் கடவுளிடமிருந்து வரும் அழைப்புகள், நம் நம்பிக்கைக்குச் சவால்களாக அமையும்போது, நம்மில் எத்தனைபேர், எத்தனைமுறை, மற்ற 'எளிதான'க் கடவுள்களைத் தேடியிருக்கிறோம்! அல்லது, நமது தேவைகளுக்கேற்ற கடவுள்களை உருவாக்கியிருக்கிறோம்!

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.