2015-01-08 16:37:00

திருத்தந்தை - வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்


சன.08,2015. மனிதர்களிடம் இவ்வளவு வன்முறை உணர்வுகள் உள்ளனவே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.

சனவரி 08, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியின்போது, இப்புதனன்று பாரிஸ் மாநகரில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட கொடுமையைக் குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இந்த வன்முறையால் கொல்லப்பட்டவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தன் செபங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அரசியல், மதம், கலாச்சாரம் என்ற பல தலைப்புக்களில் கருத்துக்களை வெளியிட்டுவரும் Charlie Hebdo என்ற வார இதழ் அலுவலகத்தின்மீது முகமூடி அணிந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் இப்புதன் நடுப்பகலில் நடத்திய தாக்குதலில், ஆசிரியர் குழுவின் நான்கு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமுற்று மரணத்தோடு போராடி வருகின்றனர்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.