2015-01-08 17:16:00

2ம் உலகப் போருக்குப் பின்னர், முதன்முறையாக உக்ரேய்ன்-இரஷ்யர்கள் இணைந்து கிறிஸ்மஸ்


சன.08,2015. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், முதன்முறையாக உக்ரேய்ன் மற்றும் இரஷ்ய கிறிஸ்தவர்கள் இணைந்து கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பித்தனர் என்று உக்ரேய்ன் கிரேக்க-கத்தோலிக்கப் பேராயர் Sviatoslav Shevchuk கூறினார்.

உக்ரேய்ன் நாட்டில் போர்ச்சூழல் நிலவி வருவதற்கு மத்தியிலும், Donbass மாநிலத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பித்ததாகக் கூறிய Kyiv-Halych பேராயர் Shevchuk அவர்கள், உக்ரேய்னில் அமைதி நிலவுமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

பொதுவான கருத்து வாக்கெடுப்புகளில் மட்டுமல்லாமல், தங்களின் அன்றாட வாழ்விலும் விசுவாசிகள் தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்திற்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார் பேராயர் Shevchuk.

இரஷ்ய அர்த்தடாக்ஸ் சபை சனவரி 7ம் தேதியன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது

 ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.