2015-01-07 16:54:00

மத்திய தரைக் கடலில் குடியேற்றதாரரைக் கைவிடும் கப்பல்கள் அதிகரிப்பு


சன.07,2015. ஐரோப்பாவில் நுழைய முயற்சிக்கும் குடியேற்றதாரரை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்து அக்கப்பல் ஓட்டுனர்கள் அவற்றை மத்திய தரைக் கடலில் கைவிடும் புதிய பழக்கம் அதிகரித்து வருவது, கவலை தருகிறதென்று, அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனமான IOM தெரிவித்தது.

இவ்வாறு கடலில் கைவிடப்படும் குடியேற்றதாரரில் பலர், சிரியாவில் இடம்பெறும் சண்டையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் அப்பாவி மக்கள் என்றும், மற்றவர்கள் லிபியாவிலிருந்தும், வேறுபல நாடுகளிலிருந்தும் வருபவர்கள் என்றும் IOM நிறுவனம் கூறியது.

இவ்வாறு ஓட்டுனர்களால் கைவிடப்படும் கப்பல்கள், மாயக் கப்பல்கள் என்ற புனைப்பெயரையும் பெற்றுள்ளன.

கடந்த சில வாரங்களில் இத்தகைய இரண்டு மாயக் கப்பல்கள் இத்தாலியக் கடற்கரையை வந்தடைந்துள்ளன. Blue Sky M என்ற கப்பலில் 736 குடியேற்றதாரரும், Ezadeen என்ற கப்பலில் 359 குடியேற்றதாரரும் இருந்தனர்.

2014ம் ஆண்டில் முதல் 11 மாதங்களில் 1,63,368 குடியேற்றதாரரை இத்தாலிய அரசு, கடலில் மீட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை, 2013ம் ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். 

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.