2014-12-30 15:59:18

பிரித்தானியாவில் அழியும் அபாயத்தில் 7,000 கட்டிடங்கள்


டிச.30,2014. பிரித்தானியாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏறக்குறைய 7,000 கட்டிடங்கள் அழியும் ஆபத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
கடல் நீர்மட்டத்தின் அதிகரிப்பால் பிரித்தானிய கடற்கரைப் பகுதிகளில் வீடுகள் உட்பட ஏறக்குறைய 7,000 கட்டிடங்கள்வரை கடல் அரிப்பினால் அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் 800 கட்டிடங்களை கடல்நீர் முழ்கடித்துவிடும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த நூற்றாண்டில் ஏறக்குறைய 100 கோடி பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்கள் கடலின் பேரலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிரித்தானியாவுக்கு இழப்பைத் தரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, Cornwall கடல்பகுதி அடுத்த 20 ஆண்டுகளில் 76 வீடுகளை கடல் நீருக்கு இரையாக்கும் என்றும், Great yarmouth பகுதி ஏறக்குறைய 293 வீடுகளையும், Southampton பகுதி ஏறக்குறைய 280 வீடுகளையும் இழக்க நேரிடும்.
மேலும் பிரித்தானியாவின் மற்ற கடற்கரைப் பகுதிகளில் ஏறக்குறைய 295 வீடுகள் அழியலாம் அல்லது வானிலையின் விளைவாக 430 கட்டிடங்கள் அழியும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.