2014-12-29 16:34:16

திருத்தந்தை : செபம் மற்றும் கலந்துரையாடல் மூலம் உலகின் உப்பாக மாறுங்கள்


டிச.29,2014. செக் குடியரசின் Pragueல் Taize கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவின் 37வது ஐரோப்பிய கூட்டம் இடம்பெற்றுவருவதற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
2015ம் ஆண்டில் செபம் மற்றும் ஒருவர் ஒருவரிடையே உருவாகும் கலந்துரையாடல்கள் மூலம் எவ்வாறு உலகின் உப்பாக செயல்படமுடியும் என கூடி விவாதித்துவரும் இக்குழுவிற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
செக் குடியரசு, மக்களாட்சிக்குத் திரும்பியதன் 25ம் ஆண்டை சிறப்பிக்கும் நேரத்தில் இடம்பெறும் Taize கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவின் இந்த சந்திப்பு, அந்நாட்டில் மறைசாட்சிகளாக இறந்துள்ள மக்களுக்காகவும், நாட்டின் சுதந்திர பாதைக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகின் ஒவ்வொரு தெருவுக்கும் மூலைக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்லும் இளையோருக்கு தன் நன்றியையும் ஊக்கத்தையும் இந்த Taize கூட்டத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.