2014-12-29 16:35:40

கென்யாவில் பதட்ட நிலைகளை அகற்ற அரசுடன் தலத்திருஅவை ஒத்துழைப்பு


டிச.29,2014. கென்யாவின் வடபகுதியில் எழுந்துள்ள பதட்ட நிலைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், நல ஆதரவு மற்றும் நீர் விநியோகப் பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்ற தலத்திருஅவை முன்வந்துள்ளது.
வட கென்யாவில் நீர் ஆதாரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப்பற்றும் முயற்சியில் நாடோடி இனத்தவர்களிடையே எழுந்துள்ள பிரச்னையில் தீர்வுகாண தலத்திருஅவை அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பை வழங்கிவருவதாக உரைத்த அந்நாட்டின் Lodwar ஆயர் Dominic Kimengich அவர்கள், இதுகுறித்து மறைமாவட்டத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கெயெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இரு குழுக்களிடையே சண்டையை நிறுத்த முதலில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு ஒன்றை திருஅவை வழங்கி இருப்பதாக கூறினார் ஆயர் Kimengich.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதால், ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை மனதில் கொண்டு, சிறார்களுக்கான கல்வியில் திருஅவை முக்கியக் கவனம் செலுத்தி வருவதாகவும் ஆயர் Kimengich கூறினார்

ஆதாரம் : FIDES







All the contents on this site are copyrighted ©.