2014-12-26 15:53:24

மலேசியாவில் சகிப்புத்தன்மையை உருவாக்க பல்சமயத் தலைவர்கள் முயற்சி


டிச.26,2014. மலேசியாவில் இன மற்றும் சமயப் பதட்டநிலைகள் காணப்படுகின்றபோதிலும், பல்வேறு பின்னணிகளிலிருந்து வாழ்ந்துவரும் அந்நாட்டினர் மத்தியில் நல்மனம் தொடர்ந்து நிலவுகின்றது என்று பல்சமயத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட கிறிஸ்மஸ் செய்தி கூறுகிறது.
மலேசிய புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச மதங்களின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், நம்பிக்கையின்மை, சந்தேகம், பழிக்குப்பழி, அவமதிப்பு ஆகிய காயங்களினின்று நாட்டினர் குணமடைய வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
பரிவு, கருணை ஆகிய பண்புகளால் நாட்டில் பரவிவரும் தீமைகளைக் குணப்படுத்துவோம் எனவும், மதங்கள் மத்தியில் உரையாடல் நடைபெற வேண்டுமெனவும், மலேசிய பல்சமய அவையினர் தங்களின் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.