2014-12-20 16:13:25

மனிதரின் ஆயுள்காலம், ஆறு ஆண்டுகள் அதிகரிப்பு


டிச.20,2014. உலக அளவில் மனிதரின் ஆயுள்காலம், 1990ம் ஆண்டில் இருந்ததைவிட தற்போது ஆறு ஆண்டுகள் அதிகரித்துள்ளது, இதற்கு, நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பதே காரணம் என்று, Global Burden of Disease (GBD) என்ற நலவாழ்வு ஆய்வுகள் அமைப்பு கூறியது.
பணக்கார நாடுகளில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளும், ஏழை நாடுகளில் வயிற்றுப்போக்கு, ஷயரோகம், மலேரியா ஆகிய நோய்களால் ஏற்படும் இறப்புகளுமே காரணங்கள் என்று, GBD அமைப்பின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகில் நோய்களின் பாதிப்புகள் குறித்து 2013ம் ஆண்டிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இவ்வமைப்பினர், உலகில் ஆண்டுதோறும் மனிதரின் ஆயுள்காலம் அதிகரித்து வருகிறது என்றும், அதேநேரம், ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளில் 1990ம் ஆண்டிலிருந்து மனிதரின் ஆயுள்காலம் ஐந்து ஆண்டுகள் குறைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
இதற்கு, எய்ட்ஸ் நோயால் இடம்பெறும் இறப்புகள் காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1990ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரையிலான காலக்கட்டத்தில் 188 நாடுகளில் 240 விதமான நோய்களால் ஆண்டுதோறும் ஏற்படும் இறப்புகள் குறித்து GBD அமைப்பு ஆய்வுகள் நடத்தி இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Reuter








All the contents on this site are copyrighted ©.