2014-12-16 15:27:00

திருத்தந்தையின் இலங்கைத் திருத்தூதுப் பயணம் அமைதியைக் கொண்டுவரும்


டிச.16,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருத்தூதுப் பயணம் அந்நாட்டுக்கு ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டுவரும், இதில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருத்தூதுப் பயணம், அந்நாட்டின் அரசுத்தலைவர் தேர்தல் காலத்தில் நடைபெறுவதையொட்டி எழுந்துள்ள விவாதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கை கிறிஸ்தவர்களுக்கென வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் இரஞ்சித்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க இத்திருத்தூதுப் பயணத்தில் நம்பிக்கை வைத்து, இதன் தயாரிப்புக்களில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார் கர்தினால் இரஞ்சித்.
இலங்கை ஆயர் பேரவைத் தலைவரும், கொழும்பு பேராயருமான கர்தினால் இரஞ்சித் அவர்களின் இவ்வறிக்கை, அந்நாட்டின் கத்தோலிக்க அதிகாரப்பூர்வ செய்தித்தாளான The Messengerல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசுத்தலைவர் தேர்தல் வருகிற சனவரி 8ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.