2014-12-03 16:13:44

போரிடும் குழுக்களிடம் ஆயுதப் பயன்பாடு இருப்பது நாட்டின் பாதுக்காப்பைக் குலைக்கிறது - மத்திய ஆப்ரிக்க ஆயர்கள்


டிச.03,2014. ஆயுதம் தாங்கிய குழுக்கள், மக்களையும், நாட்டையும் இன்னும் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர் என்று மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிறு துவங்கியுள்ள திருவருகைக் காலத்திற்கென மடல் ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய ஆப்ரிக்க ஆயர்கள், 2012, 2013 ஆகிய ஆண்டுகள் நாட்டில் நிலவிய உள்நாட்டுப் போரின் எதிரொலியாக இன்னும் குழுக்களிடம் ஆயுதப் பயன்பாடு இருப்பது நாட்டின் பாதுக்காப்பைக் குலைக்கிறது என்று கூறியுள்ளனர்.
Seleka மற்றும் Balaka ஆகிய இனங்களிலிருந்து உருவாகியுள்ள பல்வேறு குழுக்களிடம் ஆயுத வர்த்தகம், மற்றும் பயன்பாடு நிலவி வருவதால், வழிப்பறிக் கொள்ளைகள், ஆள் கடத்தல் ஆகிய குற்றங்கள் நாட்டில் பெருகியுள்ளன என்று ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மக்களைக் காக்க, அரசு, பன்னாட்டு அரசுகளின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆயர்கள் தங்கள் திருவருகைக் கால மடலில் கூறியுள்ளனர் என்று Fides செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.