2014-12-03 16:17:27

Mosul நகரில், ஒரு சில கிறிஸ்தவ கோவில்கள், சிறைகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன


டிச.03,2014. இவ்வாண்டு ஜூன் மாதம் முதல், ISIS பிடியில் சிக்கியுள்ள Mosul நகரில், ஒரு சில கிறிஸ்தவ கோவில்கள், சிறைகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன என்று Fides செய்தியொன்று கூறுகிறது.
கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த அமல உற்பவ அன்னை ஆலயமும், புனித ஜார்ஜ் துறவு மடமும் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் இடங்களாக மாறியுள்ளன என்று மொசுல் நகரிலிருந்து வெளியான ஓர் இணையத்தள செய்தி கூறுகிறது.
கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த திரு இருதய சபை அருள் சகோதரிகளின் துறவு இல்லம் ஒன்று ISIS வன்முறைக் குழுவின் பிடியில் சிக்கியபின், நவம்பர் இறுதியில் அந்தத் துறவு இல்லம் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
ISIS வன்முறையாளர்களைக் கைப்பற்ற விழையும் பன்னாட்டு அரசுகள், பழமை வாய்ந்த இந்த துறவு மடங்களைத் தாக்கி, அவற்றை முற்றிலும் அழிக்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது என்று Fides செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.