திருவழிபாட்டு முறை மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறை பேராயத்தின் புதியத் தலைவர் -
கர்தினால் Robert Sarah
நவ.24,2014. திருவழிபாட்டு முறை மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறை ஆகியப் பணிகளில் ஈடுபட்டுள்ள
பேராயத்தின் தலைவராக, கர்தினால் Robert Sarah அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
இத்திங்களன்று நியமித்தார். இத்திருப்பேராயத்தின் தலைவராக, கடந்த ஆறு ஆண்டுகள் பணியாற்றிய
கர்தினால் Antonio Cañizares Llovera அவர்கள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம், இஸ்பெயின்
நாட்டின் வலென்சியா உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றுச் சென்றார். இத்திருப்பேராயத்தின்
புதியத் தலைவராக நியமனம் பெற்றுள்ள, 69 வயது நிறைந்த கர்தினால் Sarah அவர்கள், ஆப்ரிக்காவின்
Guinea நாட்டைச் சேர்ந்தவர். 1979ம் ஆண்டு Conakry உயர் மறைமாவட்டத்தின் பேராயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட
Sarah அவர்கள், 2010ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார். நற்செய்திப் பரப்புப்பணி
பேராயத்தின் செயலராக, பத்தாண்டுகள் பணியாற்றிய கர்தினால் Sarah அவர்கள், 2010ம் ஆண்டு
முதல், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் 'Cor Unum' அவையின் தலைவராகப் பணியாற்றிவந்தார்.