2014-11-18 14:54:31

ஈராக் நகரிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற அச்சுறுத்தல்


நவ.18,2014. சிரியாவின் Ar-Raqqah நகரிலிருந்து பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வெளியேறியபின், இன்னும் மீதமிருக்கும் 23 குடும்பங்களும் 535 டாலர் வரி கட்டவேண்டும்; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஐ.எஸ்.ஐ.எல் இஸ்லாமிய அரசு கட்டளையிட்டுள்ளது.
ஈராக் மற்றும் லெவன்ட் பகுதியின் இஸ்லாமிய அரசு (Islamic State of Iraq and the Levant) என தன்னை அழைத்துக்கொள்ளும் இந்தக் குழு, ஏற்கனவே விவிலியங்களையும் கிறிஸ்தவ இலக்கியங்களையும் எரித்துள்ளது. இஸ்லாமிய அரசின் தலை நகராக வட மத்திய ஈராக்கில் இந்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ள Ar-Raqqah நகரில் கிறிஸ்தவர்களின் அனைத்து அடையாளங்களையும் அழிப்பதில் தீவிரமாக முயன்று வருகிறது இந்த அரசு.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஈராக்கில் கிறிஸ்தவம் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Cath.Culture








All the contents on this site are copyrighted ©.