2014-11-14 16:32:59

வத்திக்கான் வளாகத்திலுள்ள பொதுக் கழிப்பறைகளுடன் குளியல் அறைகளும் சேர்க்கப்படும்


நவ.14,2014. வீடில்லாத மக்கள் குளிப்பதற்கு உதவியாக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைந்துள்ள பொதுக் கழிப்பறைகளுடன் குளியல் அறைகளும் கட்டப்படும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரால் பிறரன்பு உதவிகள் செய்யும் பேராயர் Konrad Krajewski அவர்கள், ஊடகங்களிடம் இத்தகவலை அறிவித்தார்.
இப்பிறரன்புப் பணிக்கு தன்னார்வப் பணியாளர்களும், இன்னும், சோப், துண்டுகள், சுத்தமான உடுப்புகள் போன்றவையும் தேவைப்படுகின்றன என்று கூறிய பேராயர் Krajewski அவர்கள், நாம் நற்செய்தி அறிவுரைகளின்படி நடக்க வேண்டும், அதேநேரம் அறிவோடும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
குளியல் அறைகள் கட்டும் பணிகள் இம்மாதம் 17ம் தேதி ஆரம்பிக்கப்படும் என்றும் பேராயர் கூறினார்.
கடந்த அக்டோபரில் வத்திக்கானுக்கு அருகில் வீடற்ற ஒரு மனிதரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அன்று அவரின் 50வது பிறந்த நாள் என்றறிந்து அவரை ஓர் உணவு விடுதிக்குச் சாப்பிட அழைத்ததாகவும், ஆனால் இந்த அழுக்கான, நாற்றமடிக்கும் ஆடையுடன் இருக்கும் தன்னை அங்கு அனுமதிக்கமாட்டார்கள் என அவர் கூறியது, இந்தப் புதிய முயற்சிக்குக் காரணம் எனவும் பேராயர் Krajewski அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.