2014-11-14 16:33:06

ஓர் இயேசு சபை அருள்சகோதரருக்கு உயரிய அறிவியல் விருது


நவ.14,2014. இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno அவர்களுக்கு, உயரிய அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் வானியியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான Guy Consolmagno அவர்களுக்கு, AAS என்ற அமெரிக்க வானியல் கழகம், Carl Sagan Medal அறிவியல் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
Arizona மாநிலத்தின் Tucsonல் வான்கோள்கள் அறிவியல் பற்றி நடைபெற்ற 46வது கூட்டத்தில், அருள்சகோதரர் Guy Consolmagno அவர்கள் இவ்விருதைப் பெற்றார்.
அமெரிக்க வானயியலாளரும், உலகவியலாளரும், கணித நிபுணருமான Carl Sagan அவர்கள் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.
வத்திக்கான் வானியியல் ஆய்வு மையம் கையாளும் நவீன தொழில்நுட்ப டெலஸ்கோப், அரிசோனா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள Pinaleno மலைகளில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பீடச் செய்தித் தொடர்பாளரும், வத்திக்கான் வானொலி இயக்குனருமான இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், மூன்று திருத்தந்தையர்க்கு, ஊடகத்துறையில் 25 ஆண்டுகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டி உரோம் சலேசிய பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ முனைவர் பட்டத்தை இவ்வெள்ளி மாலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.