2014-11-13 16:08:18

ஆஸ்திரிய குடியரசின் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


நவ.13,2014. ஆஸ்திரிய குடியரசின் அரசுத் தலைவர், Heinz Fischer அவர்களையும், உடன் வந்திருந்த அரசு அதிகாரிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
ஆஸ்திரிய குடியரசுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், மனித உரிமைகள், குறிப்பாக, மதஉரிமை இழந்துள்ள உலக நிலை குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டது என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.
மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் அமைதியற்ற நிலை, பல்சமய, மற்றும் பன்முனைக் கலாச்சாரச் சூழல்களில் நிலவவேண்டிய உரையாடல்கள் ஆகிய கருத்துக்களும் இச்சந்திப்பில் இடம்பெற்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையுடன் மேற்கொண்ட இச்சந்திப்பிற்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவுகள் கொள்ளும் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும், ஆஸ்திரிய அரசுத்தலைவரும் உடன் வந்திருந்தோரும் சந்தித்துப் பேசினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.