2014-11-10 15:41:34

உலகில் வறியோர்-செல்வந்தர் இடைவெளி அதிகரிக்கிறது


உலகில் வறியோர், செல்வந்தர் இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகரித்துவருவதாக வறுமையை அகற்றுவதற்கு உழைத்துவரும் OXFAM என்ற பிறரன்பு அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
உலகிலிருந்து வறுமையை ஒன்றிணைந்து அகற்றவேண்டும் என்ற நோக்குடன் இயங்கிவரும் இந்த அமைப்பு, அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் 350 கோடி மக்களின் கைகளில் இருக்கும் சொத்துக்களின் மதிப்புக்கு இணையாக, உலகின் பெரிய செல்வந்தர்கள் 85 பேர் சொத்துக்கள் சேர்த்துள்ளனர் எனத் தெரிவிக்கிறது.
இந்த 85 செல்வந்தர்களின் சொத்து கடந்த ஆண்டில், ஒவ்வொரு நாளும் 66 கோடியே 80 இலட்சம் டாலர்கள் அதிகரித்து வந்துள்ளதாகவும் கூறும் ஆக்ஸ்ஃபாம் அமைப்பு, வறியோர், செல்வந்தர் இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகரித்து வருவதன் விளைவாக, வறியோர் இன்னும் துன்பங்களையே தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள் எனவும் உரைக்கிறது.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.