தடுப்பூசி நடவடிக்கையில் கென்யப் பெண்கள் அறியாமலே கருவளக்கேடு செய்யப்படுகின்றனர்
நவ.08,2014. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் டெட்டனஸ் நோய்க்கெதிரான தடுப்பூசிபோடும் நடவடிக்கையில்,
கருத்தாங்கும் நிலையைத் தடுக்கும்திறன், பெண்கள் அறியாமலே அவர்களுக்குச் செய்யப்படுகின்றன
என்று கென்ய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர். ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல அமைப்பு
மற்றும் ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவியுடன் இடம்பெறும் இந்த டெட்டனஸ் நோய்த்
தடுப்பு நடவடிக்கையில், கென்யாவில் இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட இளம் பெண்களுக்குத்
தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கை, மறைமுகமான மக்கள்தொகை கட்டுப்பாட்டு
நடவடிக்கை என்பதில் தாங்கள் உறுதியாய் இருப்பதாக ஆயர்கள் பீதெஸ் செய்தி நிறுவனத்திடம்
கூறியுள்ளனர். பெண்களின் கர்ப்பகாலத்தின்போது சாதாரணமாக உற்பத்தி செய்யப்படும் HCG
சுரப்பியை இந்தத் தடுப்பூசி மருந்து கொண்டிருப்பதாகவும், இந்த மருந்தை கர்ப்பம் தரிப்பதற்கு
முன்னர் பெறுவது, பின்னர் கரப்பம் தரிக்கும் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படக் காரணமாகும்
எனவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில்
வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தில் Beta-HCG இருந்தது என அனைவருக்கும் அறிவிக்க விரும்புவதாகவும்
ஆயர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.