2014-10-31 15:19:05

குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற இறுதித் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு


அக்.31,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற இறுதி அறிக்கையின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
குடும்பங்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் சூழலில் எதிர்கொள்ளப்படும் மேய்ப்புப்பணி சவால்கள் என்ற தலைப்பில் இந்த அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடந்த குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற இறுதித் தொகுப்பு இத்தாலியத்தில் முதலில் வெளியிடப்பட்டது.
அதன் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரை, முடிவுரை உட்பட ஐந்து பிரிவுகளாக உள்ள இந்தத் தொகுப்பு, குடும்பத்தின் சூழலுக்கும் சவால்களுக்கும் செவிமடுப்பது, குடும்பத்தின் நற்செய்தியில் கிறிஸ்துவை நோக்குதல், மேய்ப்புப்பணியில் உண்மையான குடும்பச் சூழல்களை எதிர்கொள்ளுதல் ஆகிய தலைப்புகளில் அலசியுள்ளது.
குடும்பத்தின் சமூக-கலாச்சார சூழல், வாழ்வில் அதன் முக்கியத்துவம், கடவுளின் மீட்புத்திட்டத்தில் குடும்பம், பல்வேறு சூழல்களில் குடும்பத்தின் நற்செய்தியை அறிவித்தல், பிரிந்து வாழும் தம்பதியர், திருமணமுறிவு பெற்ற, மீண்டும் திருமணம் புரிந்துள்ளவர்கள், தனித்துவாழும் பெற்றோர்... இவ்வாறு பல கிளை தலைப்புக்களையும் இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.