2014-10-30 16:14:35

ஹையான் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் தீவிரம்


அக்.30,2014. பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று தலத்திருஅவை கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டித் தரப்படவேண்டிய 3000த்துக்கும் அதிகமான வீடுகளில் இதுவரை 1600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும், பிலிப்பின்ஸ் அரசு தங்கள் பணிகளை இன்னும் அவசரப்படுத்துவது அவசியம் என்றும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் செயலர் அருள்பணி Edu Gariguez அவர்கள் கூறினார்.
தலத்திருஅவை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு அரசின் முழு ஆதரவும் தேவை என்றும், அரசு அளிக்கும் உதவிகளை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதும் அவசியம் என்றும் அருள்பணி Gariguez ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.