2014-10-28 15:19:01

வளர்ந்த நாடுகளில் சிறார் வறுமை அதிகரிப்பு, யூனிசெப்


அக்.28,2014. 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உலகின் பணக்கார நாடுகளில் இலட்சக்கணக்கான சிறார் வறுமைக்கு உட்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
“பின்னடைவுச் சிறார்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனத்தின் 41 நாடுகளில் 23ல் சிறார் வறுமை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வளர்ந்த நாடுகளில் வறுமையில் வாழும் சிறாரின் எண்ணிக்கை 7 கோடியே 65 இலட்சமாக உயர்ந்துள்ளதென்று அவ்வறிக்கை மேலும் கூறுகின்றது.
2008ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரையிலான காலத்தில் அயர்லாந்து, குரோவேஷியா, லாத்வியா, கிரீஸ், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் சிறார் வறுமை ஐம்பது விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும் யூனிசெப் அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.