2014-10-28 15:18:34

முஸ்லிம்களின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து கானடா ஆயர்கள் கவலை


அக்.28,2014. கானடாவின் போர் நினைவுச்சின்னம் மற்றும் பாராளுமன்றம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, அனைத்துவிதமானப் பயங்கரவாதச் செயல்களும், கொலைகளும், மரணங்களும் கடவுளின் கொடையாகிய இயேசுவில் ஒருநாள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது அந்நாட்டுத் தலத்திருஅவை.
இத்தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கானடா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Paul-André Durocher அவர்கள், கானடா ஆயர்கள் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தோடு உரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும், இஸ்லாமின் வன்முறைப் புரட்சிகள், உலகில் துன்பங்களையும் புரிந்துகொள்ளாத் தன்மையையும் கொணர்கின்றன
எனவும் கூறியுள்ளார்.
சவால் நிறைந்த சூழல்களில் புரிந்துகொள்ளுதலைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து மதத்தவரிடையே திறந்த மனமும், நம்பிக்கையும் பகிர்வும் தேவை என்றும் பேராயர் Durocher அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை காலையில் Michael Zehaf-Bibeau என்பவர் கானடாவின் தேசிய நினைவுச்சின்னத்தின்மீது மூன்று தடவைகள் சுட்ட பின்னர், அங்கு நின்ற காவலரையும் கொலை செய்தார். பின்னர் பாராளுமன்றக் கட்டிடத்தின்மீதும் தாக்குதல் நடத்தினார். அதன்பின்னர் தன்னையும் சுட்டுக்கொன்றார். அண்மையில் முஸ்லிமாக மாறிய இவர், சிரியாவுக்குச் செல்வதற்குத் தயாரித்துக் கொண்டிருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.